நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு மரணம்!

நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு மரணம்!

செய்திகள் 11-Nov-2013 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சின்னத்திரையில் அறிமுகமாகி, சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென ஒரு நகைச்சுவை பாணியை உருவாக்கிகொண்டவர் சிட்டிபாபு. ‘ சிவகாசி’, ‘ தூள்’, ‘ ஒற்றன்’ உட்பட பலபடங்களில் நடித்தவர். சுந்தர்.சி இயக்கிவரும் 'அரண்மனை' படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தபோது சிட்டிபாபு மயங்கி விழுந்தார்.

அவரை உடனே சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சுய நினைவில்லாமல் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல்கடந்த 8-ஆம் தேதி மரணமடைந்தார். அன்னாரது குடும்பத்திற்கு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - லொக்காலிட்டி பாடல் மேக்கிங்


;