42 நாட்களில் முடிந்த மாலினி 22!

42 நாட்களில் முடிந்த மாலினி 22!

செய்திகள் 8-Nov-2013 5:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் '22 ஃபீமேல் கோட்டயம்'. இந்தப் படத்தை தமிழில் 'ராஜ்குமார் தியேட்டர்ஸ்' சார்பில் ராஜ்குமார்சேதுபதி, ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ என்ற பெயரில் தயாரிக்க, இப்படத்தை இயக்குனரும், நடிகையுமான ஶ்ரீப்ரியா இயக்கியுள்ளார். இப்படம் 42 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டடரில் நடந்தது. படத்தின் டிரைலரை இயக்குனர் பாலசந்தர் வெளியிட , விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.

ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ‘வியாட்நாம் வீடு’ சுந்தரம், மோகன்ராம், நடிகைகள் லதா, சுஹாசினி, லிசி ப்ரியதர்ஷன், ராதிகா உட்பட படத்தில் நடித்த நித்யாமேனன், கிரிஷ் சத்தார், நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;