"என் குல தெய்வம் கிளாப் போர்டு தான்!''

"என் குல தெய்வம்  கிளாப் போர்டு தான்!''

செய்திகள் 8-Nov-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வித்தியாசங்களுக்கு பேர் போனவர் இயக்குனர் பார்த்திபன். 'வித்தகன்' படத்திற்கு பிறகு இவர் இயக்கி, நடிக்கும் படம் 'கதை, திரைகதை, வசனம், இயக்கம்'. இப்படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பார்த்திபன் பேசும்போது, ”இந்தப் படத்தின் அறிமுக விழாவின் சிறப்பு விருந்த்தினர்கள், பார்வையாளர்கள் எல்லாம் பத்திரகையாளர்களாகிய நீங்கள்தான்’’ என்று கூறி விழாவை துவக்கி வைத்தார்.

இப்படத்தின் புரமோ பாடலை மதன் கார்க்கி எழுதி வாசித்தார். பாட்டி வடை சுட்ட கதையில் தொடங்கி ஆதாம் ஏவாள் ஆப்பிள் கடித்த கதை வரை நாம் கேட்டு பழகிய கதைகளை எழுதி அவர் வாசித்த விதம் அருமையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பார்த்திபன், மதன் கார்க்கியை 'கவி சிற்றரசு' என அழைத்ததன் மூலம் இனி மதன் கார்க்கி 'கவி சிற்றரசு' மதன் கார்க்கி என்று அழைக்கப்படுவார் போலும்.

பின்னர் 'ஆரோமலே' பாடல் புகழ் மலையாள இசையமைப்பாளர், பாடகர் அல்போன்ஸ், மதன் கார்க்கியின் பாடலை பாடி அனைவரது பாராட்டையும் பெற்றார். பாடல் வரிகள் எல்லாம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பற்றி அமைந்திருந்ததால் அதை ரசிக்க முடிந்தது.

”இந்தப் படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் தான்! படம் வெளி வந்த பிறகு எல்லோரும் விஜய் சேதுபதி போல புகழ் பெறுவார்கள்’’ என்று கூறிய பார்த்திபன், தொடர்ந்து, ”பாக்யராஜ் சார் என்றைக்கு என் கையில் கிளாப் போர்டை கொடுத்தாரோ அன்று முதல் எனக்கு இந்த கிளாப் போர்டு தான் குல தெய்வம். அதனால் தான் இந்த கிளாப் போர்டை வைத்து படத்தை ஆரம்பித்திருக்கிறேன்'’ என்றார்.

வித்தியாசங்களுக்கு பெயர் பெற்ற பார்த்திபனிடமிருந்து மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை எதிர் பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ டீஸர்!


;