விஜய்க்குப் பிடித்த லேட்டஸ்ட் பாடல்!

விஜய்க்குப் பிடித்த லேட்டஸ்ட் பாடல்!

செய்திகள் 8-Nov-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் நடித்த ‘யூத்’ படத்திற்கு பாடல் எழுதிய வைரமுத்துவுக்கு அதற்கு பிறகு விஜய் நடித்த படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ’யூத்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய் இப்போது நடித்து வரும் ‘ஜில்லா’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியிருக்கிறார் வைரமுத்து. டி.இமான் இசையில், வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை சமீபத்தில் விஜய்யும், ஸ்ரேயா கோஷலும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடலை பாடி முடித்த விஜய், “இந்தப் பாடலின் வரிகளும், இசையும் அருமையாக அமைந்துள்ளது. எனது லேட்டஸ்ட் ஹிட் பாடல்களான ‘கூகுள் கூகுள்…’, ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’ பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பெற்று பெரிய ஹிட் ஆகும்’’ என்று கூறியுள்ளார் விஜய். இப்போது விஜய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இது தானாம!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;