திருடன் போலீஸ் விளையாட்டு!

திருடன் போலீஸ் விளையாட்டு!

செய்திகள் 7-Nov-2013 5:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சென்னை 28’, ‘ குங்கும பூவும் கொஞ்சு புறாவும்’, மற்றும் தேசிய விருது பெற்ற ‘ஆரண்ய காண்டம்’ ஆகிய படங்களை தயாரித்த எஸ்.பி.பி .சரணின் கேபிட்டல் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் ‘ கெனன்யா ஃபிலிம்’ ஜெ. செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் படம் 'திருடன் போலீஸ்'. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கூறும் போது, ” நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவேன் . எனது முந்தைய படங்கள் எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும் , இப்போது 'திருடன் போலீஸ்' படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாக படம் எடுக்கும் ஆவலை தூண்டியது. எனது முந்தைய படங்கள் போலவே இந்த படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.எனது நண்பன் யுவன் ஷங்கர் ராஜா முற்றிலும் ஒரு புதிய இசையை தர உள்ளார் என்பது நிச்சயம் . ’அட்ட கத்தி’ படம் பார்க்கும்போதே எனக்கு தினேஷின் மேல் ஒரு அபிமானம் இருந்தது . அவரே இப்படத்தின் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ( ‘ரம்மி’ புகழ்) நடிக்க உள்ளார்.

.இவர்களுடன் பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய், ‘நான் கடவுள்’ புகழ் ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்..

இப்படத்தின் ஒளிபதிவாளர் சித்தார்த். படத்தொகுப்பாளர் பிரவீன் .கலை ஜாக்கி . நகைச்சுவை மிளிர சிந்திக்க வைக்கும் இக்கதையை எழுதி ,வசனம் இயற்றி இயக்க இருப்பவர் கார்த்திக் ராஜு. திறமையான கலைஞர்கள் ஒருமித்து இருக்கும் இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;