கைமாறிய ஜி.வி.யின் படம்!

கைமாறிய ஜி.வி.யின் படம்!

செய்திகள் 7-Nov-2013 4:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிப்பாளராகவும் மாறி முதன் முதலாக தயாரித்திருக்கும் படம் ’மதயானைக் கூட்டம்’. இந்தப் படத்தில் கதிர், ஓவியா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் உதவியாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

கோலிவுட்டில் ஓரளவுக்கு பேசப்பட்டு வரும் இந்தப் படத்தை ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷ’னுக்கு கை மாறியுள்ளது இப்படத்தின் தயாரிப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார். சமீபத்தில் வெளியான ‘தங்க மீன்கள்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற பல படங்களை வாங்கி வெளியிட்ட நிறுவனம் ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;