கதையில்லா படம்!

கதையில்லா படம்!

செய்திகள் 7-Nov-2013 3:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மூர்த்தி என்ற பெயரோடு உதவி இயக்குனராக பணியாற்றி, ‘புதிய பாதை’ படத்தின் மூலம் இயக்குனர் - நடிகர் ஆனவர் பார்த்திபன். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல வெற்றிப் படங்களையும், தோல்வி படங்களையும் இயக்கி, தயாரித்து, நடித்த பார்த்திபன், சமீபகாலமாக நடிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையில் அவர் ஒரு சில படங்களை இயக்கி, தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட சில படங்கள் துவக்க விழாவோடு நின்றுபோன சம்பவங்களும் உண்டு! இப்போது பார்த்திபன் தனது பெயரை இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று மாற்றிக் கொண்டு, ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ (கதையில்லா படம்- என்ற டாக் லைனோடு) என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் விளம்பரங்களே வித்தியாசமாக இருக்கிறது.

இந்தப் படம் மூலம் இன்னொரு ‘புதிய பாதை’யை அமைக்க இராதாகிருஷ்ணன் பார்த்திபனை வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;