சென்னையில் சர்வதேச திரைப்பட விழா!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா!

செய்திகள் 7-Nov-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவை, ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெறவிருக்கும் 11-வது சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ஆம் தேதி துவங்கி 19-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்க இருக்கிறது.

இந்த விழாவை முன்னிட்டு உலக அளவில் விருதுகளை பெற்ற 50 நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இப்படி திரையிடப்படும் படங்களில் தமிழ் படங்களுக்கு மட்டும் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் திரையிடப்படும் தமிழ் படங்கள், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி முதல் 2013 அக்டோபர் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட படங்களக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நடுவர்களாக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகை ஸ்ரீப்ரியா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

போட்டிக்கு அனுப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் ஆங்கில சப் டைட்டிலோடு இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 6 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட உள்ளது. இந்த விழாவின் நிறைவு நாளன்று பிரபல ஹிந்தி நடிகை ஷபனா ஆஸ்மி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;