கலைஞானிக்கு இன்று பிறந்த நாள்!

கலைஞானிக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 7-Nov-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலக அளவில் சிறந்த நடிகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் முன் வரிசையில் நமது ‘கலைஞானி’ கமல்ஹாசனின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்!. அதனால்தானே அவரை ரசிகர்கள் ‘உலக நாயகன்’ என்று அழைத்து வருகிறார்கள். தனது 4-வது வயதில், ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளிலும் நடித்து கோடானு கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் சிறந்த ஒரு கலைஞனாக குடிகொண்டு வருபவர் கமல்ஹாசன்! ஒரு சினிமா கலைஞனை பொறுத்த வரையில் தொட நினைக்கும் உச்சம், ஹாலிவுட் படங்களாக தான் இருக்கும்!.

அது போன்ற சில பட வாய்ப்புகள் இந்த கலைஞானியை தேடி வந்திருக்கிறது என்றாலும், தனது சொந்த மொழியிலேயே, சொந்த நாட்டிலேயே ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படங்களை எடுக்க முடியும் என்று தனது ‘விஸ்வரூபம்’ படம் மூலம் நிரூபித்தவர், நிரூபித்துக் கொண்டிருப்பவர்! இந்தியாவே பெருமைப்படக் கூடிய கமல்ஹான் என்னும் கலைஞானி – சகலகலாவல்லவர் இந்த மண்ணில் பிறந்த நாள் இன்று! அவர் தனது இனிய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து வரும் இத்தருணத்தில் கோடானு கோடி ரசிகர்களுடன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது! விஷ் யூ ஹேப்பி பர்த்டே கமல்ஹாசன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;