சூடு பிடிக்கும் ‘ஜில்லா’ பிசினஸ்!

சூடு பிடிக்கும் ‘ஜில்லா’ பிசினஸ்!

செய்திகள் 6-Nov-2013 5:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தாயாரிப்பு, விஜய் - மோகன்லால் - காஜல் அகர்வால் கூட்டணி என ‘ஜில்லா’ படம் துவங்கிய நாளிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்! வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. சமீபத்தில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரே வெளியானது. ஆனால், அதற்குள்ளாகவே ‘ஜில்லா’ படத்தை வாங்கி வெளியிடுவதில், வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி உருவாகி இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இப்படத்தின் திருச்சி, கோவை ஏரியா வினியோக உரிமை பெரும் விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் கோவை ஏரியா வினியோக உரிமையை வாங்கிய அதே வினியோகஸ்தர்தான் ‘ஜில்லா’ படத்தின் கோவை வெளியீட்டு உரிமையையும் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம். ஆக, ‘ஜில்லா’ படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;