’க்ரிஷ் 3’ புதிய சாதனை!

’க்ரிஷ் 3’ புதிய சாதனை!

செய்திகள் 6-Nov-2013 3:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹிந்தியில், பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு, தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுக்க வெளியான படம் ‘கிரிஷ் 3’. இந்தப் படம் வெளியாகி ஐந்து நாட்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இந்தப் படம் 134 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாலிவுட் புள்ளி விவரங்கள் கூறுகிறது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குனருமான ராகேஷ் ரோஷன் இயக்கி, தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ராகேஷ் ரோஷனின் மகன் ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடித்திருக்க, இவருடன் பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணாவத், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இதற்கு முன், வெளியாகிய ஐந்து நாட்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு கிடைத்திருந்தது. ஆனால் இப்போது அந்த சாதனையை ரித்திக் ரோஷனின் ’க்ரிஷ் 3’ முறியடித்துள்ளது. உலகம் முழுக்க ‘க்ரிஷ் 3’ வெளியிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். அதனால் ’க்ரிஷ் 3’ இன்னும் பல சாதனைகள் படைக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;