'தலப்பாக்கட்டி'யில் விக்ரம் பிரபு!

'தலப்பாக்கட்டி'யில் விக்ரம் பிரபு!

செய்திகள் 6-Nov-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மலையாள ‘டிராஃபிக்’ படத்தை தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ படமாக தயாரித்து வெற்றி பெற்றவர்கள் ’ராடன் பிக்சர்ஸ்’ ராதிகாவும், லிஸ்டின் ஸ்டீஃபனும்! இவர்கள் மீண்டும் இணைந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்கள். ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் ரீ-மேக்கில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

‘தலப்பாக்கட்டி’ என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தை ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள படம் ’சிவப்பு’, இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ‘தலப்பாக்கட்டி’ படத்தில் விக்ரம் பிபுவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார், இசை அமைப்பாளர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;