ரவி கே சந்திரனின் ‘யான்’ எப்போது?

ரவி கே சந்திரனின் ‘யான்’ எப்போது?

செய்திகள் 6-Nov-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், மலையாளம், ஹிந்தி என ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருப்பவர் ரவி கே. சந்திரன். மணிரத்னம் இயக்கிய, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ராஜீவ் மேனன் இயக்கிய, ’கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, ‘7-ஆம் அறிவு’ உட்பட பல படங்களில் இவரது ஒளிப்பதிவு பேசப்படும் விதமாக அமைந்திருந்தது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர்களின் வரிசையில் இப்போது ரவி கே.சந்திரனும் இடம் பெற்று, அவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் படம், ‘யான்’.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்! இதில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக துளசி நாயர் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் படமாம் இது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார். ‘‘விரைவில் திரைக்கு வரவிருக்கும் ’யான்’ நல்ல ஒரு விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும்’’ என்கிறார் ரவி கே.சந்திரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;