ஜேம்ஸ் பாண்டுக்கு நாயகியாகும் மாடல் அழகி!

ஜேம்ஸ் பாண்டுக்கு நாயகியாகும் மாடல் அழகி!

செய்திகள் 5-Nov-2013 3:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 24-வதாக உருவாக இருக்கும் படத்தில், நான்காவது முறையாக பாண்டாக நடிக்கிறார் டானியேல் கிரெய்க். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கி, 2015-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள் இந்தப் படத்தில் பாண்டுக்கு ஜோடியாக நடிக்க, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியும், டிவி நடிகையுமான ஹெலன் ஃப்ளாநாக் தேர்வாகியிருக்கிறார். பிரட்டனில் புகழ் பெற்ற மாடல் அழகியாகவும், டிவி நடிகையாகவும் திகழ்ந்து வரும் ஹெலன் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமாம் இது.

’எனக்கு, எடுத்த எடுப்பிலேயே ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கடவுளின் கிருபையால் தான்’’ என்று கூறியிருக்கிறார் ஹெலன்! ‘ஸ்கைபால்’ என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கிய அதே சாம் மென்டிஸ் தான் புதிதாக உருவாக இருக்கும் பாண்ட் படத்தையும் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;