படமாகும் நிஜ காதல் கதை!

படமாகும் நிஜ காதல் கதை!

செய்திகள் 5-Nov-2013 3:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கேரளா - கோழிக்கோட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் மலையாள திரைப்படமாகிறது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மொய்தீன் – இந்து மதத்தைச் சேர்ந்த காஞ்சனா இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களுக்கிடையில் இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. படிப்பை முடித்த பிறகு இருவரும் வாழ்க்கையில் இணைய முற்படும்போது அவர்களது காதலுக்கும், திருமணத்திற்கும் குறுக்கே மதம் என்ற வில்லன் வந்து அவர்களை இணைய விடாமல் தடுக்கிறது.

காஞ்சனாவை அவரது பெற்றோர் வீட்டு காவலில் வைக்கிறார்கள்! வீட்டு காவலில் இருக்கும் காஞ்சனா, பல தடவை மொய்தீனுடன் இணைய முற்பட்டு, அதெல்லாம் தோல்வியில் முடிகிறது. இப்படி கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டு காலமாக வீட்டுக் காவலில் இருந்த காஞ்சனாவின் காதலன் மொய்தீன் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார். மொய்தீன் மரணடைந்த பிறகும் அவர் நினைவாகவே, மானசீகமாக அவரது மனைவியாக வாழ்ந்து வருகிறார் 74 வயதுடைய காஞ்சனா! கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிஜ காதல் சம்பவம் இப்போது ‘எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற பெயரில் திரைப்படமாகிறது.

ஏற்கெனவே, மொய்தீன் - காஞ்சனாவின் காதலை டாகுமெண்டரி படமாக எடுத்து பல விருதுகள் பெற்ற ஆர்.எஸ்.விமல் தான் இப்போது அந்த சம்பவத்தை திரைப்படமாகவும் இயக்க இருக்கிறார். இந்த காதல் சம்பவங்கள் நடந்த இடங்களிலேயே படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் விமல்! இந்தப் படத்தில் மொய்தீனாக ப்ருத்திவிராஜும், காஞ்சனாவாக ‘மரியான்’ படப் புகழ் பார்வதியும் நடிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;