நஸ்ரியா கைவசம் அரை டஜன் படங்கள்!

நஸ்ரியா கைவசம் அரை டஜன் படங்கள்!

செய்திகள் 5-Nov-2013 12:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நய்யாண்டி’ பட விவகாரத்தில் மாட்டிக்கொண்டு கொஞ்சம் அப்செட் ஆன நஸ்ரியா, இப்போது உஷாராகி விட்டார்! தற்போது மலையாளத்தில் நிவின் போலி, துல்கர் சல்மான் ஆகியோருடன் பிசியாக நடித்து வருகிறார். அவர் தமிழில் நடித்த, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்கள் ரிலீசாகிவிட்ட நிலையில், அடுத்து அவர் நடிக்கும் தமிழ் படங்கள், ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘நீ நல்லா வருவாடா’, மற்றும் பாலாஜி மோகன் இயக்க இருக்கும் படம்! இதில், ‘ஆஸ்கார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நஸ்ரியா, ‘நீ நல்லா வருவாடா’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை தற்போது விஜய், மோகன்லால் நடிப்பில் ‘ஜில்லா’ படத்தை தயாரித்து வரும் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சந்திரமோகன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற 20-ஆம் தேதி சென்னையில் துவங்க இருக்கிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவிருக்கிறது. ஆக நிறைய படங்களை கைவசம் வைத்துக் கொண்டு ஓய்வு, உறக்கமில்லாமல் படு பிசியாக நடித்து வருகிறார் நஸ்ரியா! சில தெலுங்கு படங்களில் நடிக்கவும் இவருக்கு அழைப்பு வந்திருக்கிறதாம்! ஆனால் கமிட் ஆன தமிழ், மலையாள படங்களை முடித்தப் பிறகே தெலுங்கில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்கிறார் நஸ்ரியா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;