நவம்பர் 14-ல் பீட்சா 2 வில்லா !

நவம்பர் 14-ல் பீட்சா 2 வில்லா !

செய்திகள் 6-Nov-2013 1:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம், ‘பீட்சா 2 வில்லா’. இந்தப் படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். இதில் அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து, படத்தின் ஆடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்ப, படம் எப்போது ரிலீசாகும் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது! ‘பீட்சா 2 வில்லா’ படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. ‘பீட்சா’ தந்த மாறுபட்ட ட்ரீட்டை போன்று ‘பீட்சா 2 வில்லா’ படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ட்ரீட் ஆக இருக்கும்’ என்கிறார்கள் படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் கிப்ட் சாங் வீடியோ


;