சினிமா கலைஞர்களின் பிரம்மாண்ட பேரணி!

சினிமா கலைஞர்களின் பிரம்மாண்ட பேரணி!

செய்திகள் 5-Nov-2013 10:36 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) ஊர்வலம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த ஊர்வலத்தை இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள் இந்த ஊர்வலம் சென்னையிலுள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு, தலைமை செயலகம் சென்றடைகிறது.

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ஆனால் திரைப்பட தொழிலாளர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள், நடன கலைஞர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த தொழிலை நம்பியுள்ள திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல் அமைச்சரிடம் வைப்பதற்காக இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியில் பெப்சி அமைப்பிலுள்ள எல்லா தொழிலாளர்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த அமைப்புக்கு இதுவரை இருந்த ‘தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்’ என்ற பெயரை மாற்றி இப்போது ‘தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்’ என்று வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீவிரம் - டீசர்


;