6-ஆம் தேதி இவன் வேற மாதிரி!

6-ஆம் தேதி  இவன் வேற மாதிரி!

செய்திகள் 4-Nov-2013 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கும்கி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபு, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’, ‘சிகரம் தொடு’ என பல படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘இவன் வேற மாதிரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘யுடிவி’ நிறுவனமும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன் இயக்கியிருக்கிறார்.

இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். ‘எங்கேயும் எபோதும்’ படத்திற்கு இசை அமைத்த சத்யா இசை அமைத்திருக்கிறார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. ‘கும்கி’ படத்திற்குப் பிறகு விகரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கும் இரண்டாவது படம், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியிருக்கும் படம் என பல சிறப்புகள் உள்ள ’இவன் வேற மாதிரி’ படம் மீதும் ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;