கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபு காலமானார்!

கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபு காலமானார்!

செய்திகள் 4-Nov-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தீபாவலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்த கன்னட சினிமா ரசிகர்களுக்கு, நேற்று காலை பிரபல கன்னட சினிமா இயக்குனரான ராஜேந்திர பாபு காலமான செய்தி பேரிடியாய் இடித்தது!. ‘யுக புருஷா’, ‘நானு நன்னு நன்னா ஹெடதி’, ‘ஹப்பா’, ‘ஒலவின ஒதுகரை’ உட்பட ஏராளமான கன்னடப் படங்களை இயக்கியவர் ராஜேந்திர பாபு.

இவர், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் ஒரு சில படங்களை இயக்கியிருக்கிறார். 62 வயதான ரஜேந்திர பாபுவுக்கு சனிக்கிழமை மாலை வயிற்று வலி ஏற்பட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி உள்ளார்.

காலமான ராஜேந்திர பாபுவுக்கு சுமித்ரா என்ற மனைவியும், உமா மகேஸ்வரி, நக்‌ஷத்ரா என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். கன்னட படவுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த ராஜேந்திர பாபுவின் மரணம், கன்னட சினிமா ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;