வெங்கடேஷுடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

வெங்கடேஷுடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

செய்திகள் 4-Nov-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பட்டியலில் இடம் பிடித்துவிட, அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்துள்ள, ‘இது கதிர்வேலன் காதல்’ படம் ரிலீசாகவிருக்கிறது. பட வெற்றிகளை பொறுத்த வரையில் ராசியான நடிகை ஆகிவிட்ட நயன்தாரா அடுத்து வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் படமாம் இது. இந்தப் படத்திற்கு ‘ராதா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதில் நயன்தாரா ‘ராதா’ என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தை மாருதி இயக்குகிறார். இதற்கு முன் நயன்தாரா, ‘லக்‌ஷ்மி’, ‘துளசி’ ஆகிய படங்களில் வெங்ககேஷுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பதும், இந்தப் படங்கள் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டீசர்


;