அம்மா கேரக்டரில் ரம்யா நம்பீசன்!

அம்மா கேரக்டரில் ரம்யா நம்பீசன்!

செய்திகள் 1-Nov-2013 5:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வயதில் மூத்த சில நடிகைகளே அக்கா, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க மறுக்கும்போது, இளம் வயதுடைய ஒரு நடிகை அம்மாவாக, ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார் என்றால் அவர் தான் நிஜ நடிகை! இந்தப் பாராட்டுக்குரியவர் ‘பீட்சா’ பட நாயகி ரம்யா நம்பீசன் தான்! ஏற்கெனவே ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ என்ற மலையாள படத்தில் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா, இப்போது ‘ஃபிலிப்ஸ் அண்ட் மங்கி பென்’ என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.
கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியர் எதிர்கொள்ளும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ரம்யாவின் கணவராக ஜெயசூர்யா நடித்திருக்கிறார். மகனாக நடிகை சனுஷாவின் தம்பி சனூப் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

54321 - டிரைலர்


;