ஐந்தாவது பாகத்தில் மம்முட்டி படம்!

ஐந்தாவது பாகத்தில் மம்முட்டி படம்!

செய்திகள் 1-Nov-2013 3:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

1988-ல் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான மலையாள படம் ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. சேது ராமய்யர் என்னும் எளிமையான சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தனது கூர்மையான புத்தி சாதுரியத்தால் எப்படி குற்றவாளிகளை கண்டு பிடிக்கிறார் என்பதை யதார்த்தமான காட்சிகளுடன் படம் பிடிக்கப்பட்டிருந்த இந்தப் படம் சென்னையில் கூட ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. காதல் காட்சிகள், பாடல் காட்சிகள், ஆக்ரோஷமான அதிரடி சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் சீரீஸ் ஆக நான்கு பாகங்கள் வந்து, அந்தப் படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று நன்றாக ஓடின! இப்போது அதன் ஐந்தாம் பாகம் உருவாக இருக்கிறது.

ஆனால் இந்தப் படத்தில் முந்தைய நான்கு பாகங்களில் வந்து கலக்கிய சேது ராமய்யர் கேரக்டரும் இல்லை, சேது ராமய்யராக நடித்த மம்முட்டியும் இல்லை! அவருக்கு பதிலாக முதல் பாகத்தில் சேது ராமய்யர் கேரக்டருடன் வந்து புலனாய்வில் கலக்கிய ஹாரி கேரக்டரை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து, முதல் பாகத்தில் ஹாரியாக நடித்த சுரேஷ்கோபியே நடிக்க இருக்கிறார். முந்தைய நான்கு. பாகங்களுக்கு திரைக்கதை எழுதிய எஸ்.என்.சாமியே இதற்கும் திரைக்கதை அமைக்க, முந்தைய நான்கு பாகங்களை இயக்கிய கே.மதுவே ஐந்தாம் பாகத்தையும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. மலையாளத்தில் ஒரே இயக்குனர் இயக்கத்தில் ஐந்து சீரீஸ்களாக ஒரு படம் வருவது இது தான் முதன் முறை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

"ஐ" மேக்கிங் - வீடியோ


;