டைட்டில் இல்லையா இருக்கா?

டைட்டில் இல்லையா இருக்கா?

செய்திகள் 1-Nov-2013 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களை குழப்பும் விதமாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தலைப்புகளில் இரண்டு படங்கள் உருவாகிறது. அதில் ஒரு படம் ’இல்ல ஆனா இருக்கு’. இந்தப் படத்தில் ’கழுகு’ படப் புகழ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஓவியா, ரூபா மஞ்சரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்திடம் அசிஸ்டென்டாக பணிபுரிந்த டீகே (Deekay) இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், ‘இருக்கு ஆனா இல்ல’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.

இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் சரவணன் இயக்க, இதில் விவந்த், எடன், மனிஷா முதலானோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘வரம் கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இது போன்று பெயர்களை வைத்து குழப்புவதும் ஒரு வகையான பப்ளிசிட்டி தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;