முதல் இடத்தைப் பிடித்தார் சூப்பர் ஸ்டார்!

முதல் இடத்தைப் பிடித்தார் சூப்பர் ஸ்டார்!

செய்திகள் 1-Nov-2013 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல என்.டி.டி.வி. நிறுவனம் தனது வெள்ளிவிழா ஆண்டையொட்டி, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்று நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. இதில் பொதுமக்கள் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் சினிமா நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் டோனி, கபில்தேவ், தொழிலதிபர் ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். இணையதளம் மூலம் நேரடியான கருத்துக் கணிப்பு என்பதால் இதில் ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யார் யார் என்ன இடங்களில் இருக்கிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற செய்து வருகிறார்கள்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஐந்தாம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு வந்துள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இவருக்கு அடுத்த படியாக சச்சின் டெண்டுல்கர் வருகிறார்! இவருக்கு 6.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;