தனுஷ், கார்த்தியைத் தொடர்ந்து விஷால்!

தனுஷ், கார்த்தியைத் தொடர்ந்து விஷால்!

செய்திகள் 1-Nov-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினி காந்த் நடித்த படத்தின் பெயரில் தனுஷ், கார்த்தி ஆகியோர் நடித்துள்ள நிலையில் அடுத்து விஷாலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘யூடிவி மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும், விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘நான் சிகப்பு மனிதன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1985-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘நான் சிகப்பு மனிதன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த லட்சுமி மேனனே கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஏற்கெனவே விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். இந்தப் படம், முழுநீள ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக இருக்குமாம். இந்த மாத கடைசியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்தப் படத்திற்கு எஸ்.எஸ் தமன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;