டாணாக்காரனாகும் சிவகார்த்திகேயன்!

டாணாக்காரனாகும் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 1-Nov-2013 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எதிர்நீச்சல்’ படத்தில் இணைந்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. இந்தப் படத்திற்கு ‘டாணா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகரன், இயக்குனர் துரை செந்தில்குமார் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ‘‘டாணா' என்பது தமிழ் வார்த்தைதான். இதன் பொருள் காவல் என்றும், டாணாக்காரன் என்றால் காவல்காரன் என்றும் அர்த்தம்’’ என்கிறார் பட்டுகோட்டை பிரபாகர்! இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார், யார் இசை அமைப்பாளர் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;