‘க்ரிஷ் 3’ - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

‘க்ரிஷ் 3’ - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

செய்திகள் 30-Oct-2013 4:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘க்ரிஷ் 3’ படத்தின் கதை தன்னுடையது என்றும், அதைத் திருடி, ‘க்ரிஷ் 3’ படத்தை தயாரித்திருக்கிறார் ராகேஷ் ரோஷன் என்றும் கூறி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உதய்சிங் ரஜ்புத் என்பவர் மும்பை நீதிமன்றத்தில் ‘க்ரிஷ் 3’ படத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார் அல்லவா? இதனை தொடர்ந்து ‘க்ரிஷ் 3’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான் ராகேஷ் ரோஷனும் நீதி மன்றத்தில் ஒரு மனுவை அளித்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரனை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில், ’‘உதய்சிங் ராஜ்புத், கூறப்பட்டுள்ள புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நிரூபணமாகியுள்ளது. அதனால் ராகேஷ் ரோஷன் இயக்கி, தயாரித்துள்ள ‘க்ரிஷ் 3’ படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை’’ என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்திருக்கிறது. இதனால் படம் திட்டமிட்டபடி நவம்பர் 1-ஆம் தேதி அன்றே ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;