வெள்ளித்திரையில் பிசியான அபிஷேக்!

வெள்ளித்திரையில் பிசியான  அபிஷேக்!

செய்திகள் 30-Oct-2013 1:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர், இயக்குனர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சங்க நிர்வாகி இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர் நடிகர் அபிஷேக். இவர் நடித்த முதல் படமான ‘மோகமுள்’ படத்திற்கு அப்போது தேசிய விருது கிடைத்தது. அத்துடன் சின்னத்திரை மூலம் மாநில விருது, கலைமாமணி விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சின்னத்திரையில் நடிப்பதை குறைத்த அபிஷேக், வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதில் விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘தலைவன்’, ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படங்கள் குறிப்பிடத்தக்கவை! அடுத்து ‘ஒய்நாட் மூவீஸ்’ சார்பில் பாலாஜி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இசையமைப்பாளர் செல்வகணேஷ் தயாரிப்பில், ‘நிர்ணயம்’ படத்தை இயக்கிய ஸ்ரீசரவணன் இயக்கும் ‘கோவில் ஓட்டம்’ படத்திலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.

இது தவிர ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி இயக்கும் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்திலும் நடித்து வரும் அபிஷேக்கை இனி நிறைய படங்களில் பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;