ஃபோனில் காதலை வளர்க்கும் சிம்பு!

ஃபோனில் காதலை வளர்க்கும் சிம்பு!

செய்திகள் 30-Oct-2013 12:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ‘இங்க என்ன சொல்லுது’ என பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இவர் நடித்த ‘போடா போடி’ படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்நிலையில் சிம்பு தற்போது நடித்து வரும் படங்களில் அடுத்து எந்தப் படம் ரிலீசாகும் என்று தெரியவில்லை. இந்தப் படங்களுடன் அடுத்து பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சிம்புவே தயாரிக்க, சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பு எப்போதும் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்! இப்படி ஃபோனில் பேசப் பேச அப்படியே அவரது காதலும் வளருமாம்! இந்த தகவலை சிம்புவே டுவீட் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் என்று முடிவாகாத நிலையில் சிம்பு யாருடன் ஃபோனில் பேசுகிறார் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;