நவம்பரில் இவன் வேற மாதிரி!

நவம்பரில் இவன் வேற மாதிரி!

செய்திகள் 30-Oct-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘யுடிவி’ நிறுவனமும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’. ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் சரவணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்க, சுரபி கதாநாயகியாக நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்து விட்டது. இந்தப் படத்திற்கு ‘எங்கேயும் எபோதும்’ படத்திற்கு இசை அமைத்த சத்யா இசை அமைக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நவம்பர் முதல் வாரத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

’வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. ‘கும்கி’ படத்திற்குப் பிறகு விகரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டிரைலர்


;