ஜீவனை தொடுகிற இசையில் 'ஒரு ஊர்ல'

ஜீவனை தொடுகிற இசையில் 'ஒரு ஊர்ல'

செய்திகள் 30-Oct-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விக்னேஷ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.வேலுச்சாமி தயாரிக்க, 'மச்சி' படத்தை இயக்கிய கே.எஸ்.வசந்தகுமார் இயக்கியிருக்கும் படம் ‘ஒரு ஊர்ல’. இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, கதாநாயகனாக 'பருத்தி வீரன்' படத்தில் நடித்த வெங்கடேஷ் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நேகா பாட்டீல் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு நேற்று மாலை சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடை பெற்றது.

இயக்குனர்கள் வெற்றிமாறன், ஏ.வெங்கடேஷ் இருவரும் ஆடியோவை வெளியிட, மாதேஷ், விஜய்மில்டன், மதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக 'ஒரு ஊர்ல' படத்தின் டிரைலரை வெளியிட்டு பேசிய இயக்குனர் பிரபுசாலமன், “இந்தப் படத்தின் இயக்குனர் வசந்தகுமார் எனது 14 ஆண்டுகால நண்பர். திறமைசாலி. எனக்கு படத்தை போட்டுக் காட்டினார். படம் ரொம்ப நல்லாயிருக்கு. ஆரோக்கியமான பொழுது போக்கு படம். ஒரு கிராமத்தில் இருக்கிற பல கேரக்டர்களுக்கிடையே நடக்கிற மாதிரியான கதையம்சம் கொண்ட படம். நிச்சயமா எல்லோரும் பாராட்டு படியான படமா இருக்கும். இயக்குனர் வசந்தகுமார் தைரியமா ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறார்.

ஒரு சின்னக் குழந்தைக்கும் சித்தப்பாக்கும் இடையே இருக்கும் நட்பையும், உறவையும் சொல்லியிருக்கார். இவங்களுக்கு ஒரு பாட்டு இருக்கு. இளையராஜா இசையில் உருவாகியிருக்கிற அந்தப் பாட்டு ஜீவனை தொடுகிற மாதிரி இருக்கு. ரொம்ப நேர்த்தியான படமா வந்திருக்கு. இந்தப் படம் மாபெரும் வெற்றியடையும் " என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;