ஆர்யாவுக்கு ஆபரேஷன்!

ஆர்யாவுக்கு ஆபரேஷன்!

செய்திகள் 30-Oct-2013 11:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு சில மாதங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடியபோது நடிகர் ஆர்யாவின் காலில் பலத்த அடிப்பட்டடது. அப்போது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட டாக்டர், ஆர்யாவின் அடிப்பட்ட காலில் சிறிய அளவில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்போது ஆர்யா அவசரமாக நடித்து கொடுக்க வேண்டிய சில படப்பிடிப்புகள் இருந்ததால் அப்போது ஆபரேஷன் செய்ய முடியவில்லை.

டாக்டரின் அறிவுரைப்படி அந்தப் படங்களில் நடித்தார். இப்போது அவர் நடித்து வந்த, ‘ராஜா ராணி’ படம் சமீபத்தில் ரிலீசாகி விட்டது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வந்த ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இதனால் ஆர்யாவுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்திருப்பதால் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார். அந்த ஆபரேஷனுக்குப் பிறகு இப்போது ஆர்யா தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு ஆர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;