‘ஆரம்பம்’ வெளியாவதில் திடீர் சிக்கல்!

‘ஆரம்பம்’ வெளியாவதில் திடீர் சிக்கல்!

செய்திகள் 30-Oct-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் நடித்துள்ள, ‘ஆரம்பம்’ படம் நாளை ரிலீசாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று ‘பிளாக் கிங்டம் பிக்சர்ஸ்’ சார்பில் கே.கண்ணன் என்பவர் சென்னை 14-வது உதவி சிட்டி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் , “இனி தான் ஆரம்பம்’ எனற பெயரில் நான் ஒரு சினிமா படத்தை தயாரித்து, இயக்கி வருகிறேன். இந்தப் படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி.சீரியல் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

இந்த நிலையில், ஸ்ரீ சத்யசாய் மூவிஸ் என்ற நிறுவனம் ‘ஆரம்பம்’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி.சீரியல் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்தப் படம் 31-10-13 அன்று வெளியாக இருப்பதாக விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிறது. ‘ஆரம்பம்’ என்ற தலைப்பை கொண்ட அந்தப் படம் வெளியானால் ‘இனி தான் ஆரம்பம்’ என்ற பெயரில் நான் எடுத்து வரும் படத்திற்கு பாதிப்பு வரும். மேலும் இந்த தலைப்புகளால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே ‘ஆரம்பம்’ படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;