சிக்கலில் ‘கிருஷ் 3’

சிக்கலில் ‘கிருஷ் 3’

செய்திகள் 29-Oct-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல கோடி ரூபாய் செலவில் ஹிந்தியில் உருவாகியிருக்கும் படம், ‘கிருஷ் 3’. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குனருமான ராகேஷ் ரோஷன் இயக்கி, தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ராகேஷ் ரோஷனின் மகன் ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடித்திருக்க, இவருடன் பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணாவத், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக பல கோடி ரூபாய் செலவில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் வருகிற 1-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகவிருப்பதாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், “இந்தப் படத்தின் கதை, தன்னுடையது என்றும், என்னுடைய கதையை திருடி ‘கிருஷ் 3’ படத்தை தயாரித்திருக்கிறார்கள், இதனால் எனக்கு 2 கோடி ரூபாய் தரவேண்டும், இல்லையென்றால் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது’’ என்று கூறி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உதய்சிங் ரஜ்புத் என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ‘கிருஷ் 3’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான் ராகேஷ் ரோஷன், ‘‘100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ‘கிருஷ் 3’ படத்தை தயாரித்துள்ளேன். என்னுடைய சார்பில் வைக்கப்படும் வாதங்களையும் நீதிமன்றம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதே நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்! இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கிருஷ் 3’ படம் திட்டமிட்ட படி வருகிற 1-ஆம் தேதி வெளியாகுமா? இல்லையா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;