தீபாவளியன்று ஜில்லா!

தீபாவளியன்று ஜில்லா!

செய்திகள் 29-Oct-2013 11:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி, ‘இளைய தளபதி’ விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், காஜல் அகர்வால், இயக்குனர் நேசன், இசை அமைப்பாளர் டி.இமான் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜில்லா’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வரும் இப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்க, படத்தை வருகிற பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை இந்தப் படம் சம்பந்தமான எந்த விளம்பரங்களும் வெளிவராத நிலையில் வருகிற தீபாவளியன்று இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய்யுடன் காஜல் அகர்வால் இணையும் படம் என்ற சிறப்பும் இந்தப் படத்திற்கு உண்டு1

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;