விஷ்ணுவுடன் கை கோர்க்கும் ஸ்ரீதிவ்யா!

விஷ்ணுவுடன் கை கோர்க்கும் ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 29-Oct-2013 10:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஊதா கலர் ரிப்பன்’ புகழ் ஸ்ரீதிவ்யா கைவசம் நிறைய படங்கள்! அதில் முதலாவதாக இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும், ‘பென்சில்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி முதல் கலந்துகொள்ள இருக்கிறார் ஸ்ரீதிவ்யா! இந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் அடுத்து இயக்கவிருக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.

இந்தப் படங்கள் தவிர இன்னும் இரண்டு படங்களில் கமிட் ஆக உள்ளார் ஸ்ரீதிவ்யா! இது பற்றி அவர் கூறும்போது, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஆனால் எனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் படித்து வருவதால் நடிப்புடன் படிப்பையும் கவனிக்க வேண்டியதாக இருக்கு! அதனால் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் நல்ல கதை, நல்ல பேனர், நல்ல டைரக்டர், பெரிய ஹீரோ என்றால் என் கால்ஷீட் உண்டு’’ என்கிறார் ஸ்ரீதிவ்யா

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;