மீண்டும் காமராஜ்!

மீண்டும்  காமராஜ்!

செய்திகள் 28-Oct-2013 12:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலமாக, பல வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த சில படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘காமராஜ்’ படம் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் வெளிவர இருக்கிறது.

1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். அத்துடன் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராகத் திகழ்ந்தவர். ஊழலே செய்யாதவர் என்று விரல் நீட்டி சொல்லக் கூடியவர்களில் காமராஜர் ஒருவர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாறுதான் ‘காமராஜ்’ படம். ஏற்கெனவே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘காமராஜ்’ படத்தில் இப்போது 15 புதிய காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே வெளிவந்த ‘காமராஜ்’ படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்து விட்டதால் புதிய காட்சிகளில் அவரது மகன் பிரதீப் மதுரம் காமராஜராக நடித்திருக்கிறார். பெரியார் வேடத்தில் விஜயகுமார் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் பாலகிருஷ்ணன் படம் குறித்து, “காமராஜரின் வாழ்கையை படமாக்கியதில் நான் பெருமை அடைகிறேன். புதிதாக இணைக்கப் பட்டுள்ள பல காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். இதில் அவர் ரஷ்யாவுக்கு பயணம் செய்த காட்சிகள் இணைக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ள ‘காமராஜ்’ படம் எல்லோரையும் கவரும் என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;