வலியுடன் ஒரு காதல்!

வலியுடன் ஒரு காதல்!

செய்திகள் 28-Oct-2013 12:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மதராஸ் பிளசிங் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில், பி.ரவிராஜேஷ் தயாரிக்கும் படம் ‘வலியுடன் ஒரு காதல்’. இந்தப் படத்தில் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே.கே.செல்வாஹ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சி.எம்.சஞ்சீவன் படம் குறித்து கூறும்பொது,

“கிராமத்து நண்பர்களுடன் ஊர் சுற்றுவதுதான் வலியுடன் கதாநாயகனின் வேலை. அப்படி அவர் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரில் உள்ள பணக்கார வீட்டுப் பெண்னை காதலிக்கிறார். அந்தப் பெண்ணும் இவரை காதலிக்கிறார். ஆனால் அவள் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பதால் தன் காதலை காதலனிடம் சொல்லாமல் மறைக்கிறாள். ஒரு கட்டத்தில் நாயகன், ‘ஏன் காதலை மறைக்கிறாய்?’ என்று நாயகியிடம் கேட்க, உடனே அவள், ‘காதல் வாழவேண்டும், காதலனும் வாழவேண்டும்’ என்று கூறுகிறாள். பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது அதை நாயகியின் முறைமாமன் பார்த்துவிட, பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘வலியுடன் காதல்’ படம். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் பாராட்டும் விதம் இருக்கும்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;