சுட்டக்கதை

இந்த சுட்டக்கதையை கொடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு டிவிடில சுட்டு கதை பண்ணியிருந்தாலும் பரவாயில்லை' என முணுமுணுக்கின்றனர் ரசிகர்கள்.

விமர்சனம் 28-Oct-2013 11:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோரமலை என்ற அழகிய பழங்குடி மலை கிராமம். அதன் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர். வேட்டையாடுவதை தொழிலாக கொண்டுள்ள இவர் வேட்டையாட போகும் போது சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

கொலையாளியை கண்டுபிடிக்கும் பணியில் எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக வரும் லஷ்மிப்ரியா ஒருபுறமும், சோம்பேறிகளின் கூடாரமாக விளங்கும் கோரமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாசர், கான்ஸ்டபிள்களான பாலாஜி, வெங்கடேஷ் ஆகியோரும் துப்பு துலக்குகின்றனர்.

கொலையாளிகள் யார் அவர்கள் எதற்காக கொலை செய்தார்கள் என்ற விபரங்களை சுவாரஷ்யமாக கொடுக்க முயற்சி செய்து, தோற்று போயிருக்கிறார் என்றாலும், காமிக்ஸ் தனமாக ஒரு முயற்சி செய்து கொடுக்க முயன்றதற்காக பாராட்டிவிடலாம்.எழுதி இயக்கி இருக்கிறார் சுபு.

படம் ஆரம்பித்து அரைமணி நேரமாகியும் திரைக்கதை சூடு பிடிக்காமல் சுறுசுறுப்பும் சுவாரஷ்யமில்லாமலும் செல்வதால் படத்தில் ஒன்ற முடியாமல் நமக்கு சலிப்பு தோன்றுகிறது. பாலாஜியும், வெங்கடேஷும் தங்களது பங்கிற்கு நடித்துள்ளனர். கல்வி அமைச்சரின் சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலைக்கு சேரும் சங்கிலி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

நாசர், ஜெயபிரகாஷ், லஷ்மிராமகிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சிவாஜி என பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயண்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் சுபு.

இசை 'மேட்லி ப்ளூஸ்', ஒளிப்பதிவு நிஷார் பராவாயில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது 'இந்த சுட்டக்கதையை கொடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு டிவிடில சுட்டு கதை பண்ணியிருந்தாலும் பரவாயில்லை' என முணுமுணுக்கின்றனர் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;