80-90 காலகட்டத்தை நினைவுப்படுத்தும் படம்!

80-90 காலகட்டத்தை நினைவுப்படுத்தும்  படம்!

செய்திகள் 28-Oct-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விக்னேஷ் புரொடக்ஷன்ஸ்’ என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் ‘ஒரு ஊர்ல’. இந்தப் படத்தில் ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர். கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குபவர் வசந்தகுமார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘இந்தப் படத்திற்காக இளையராஜா இசையில் வேல்முருகன் பாடிய, ‘இப்படியும் ஒருத்தன் உண்டு அத எப்படி நான் சொல்லுவது?’ என்ற பாடல் பரபரப்பாக பேசப்படும்.

இளையராஜாவின் இசை என்பது எந்த கால கட்டத்திலும் ரசிக்க கூடிய மெலடிகள். இளையராஜா அவர்கள் இசை புரட்சி செய்த 1980 – 90 கால கட்டங்களில் அவரது மெலடி பாட்டுகள் எப்படி இசை புரட்சி செய்ததோ, அது மாதிரி ‘ஒரு ஊர்ல’ படத்தின் அனைத்து பாடல்களும் மெலடியாக 80 - 90 கால கட்டத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் ! அது மட்டுமல்லாமல் படத்தை முழுவதும் பார்த்து விட்டு அதற்க்கு பிறகு பாடல்கள் இசையமைக்கப்பட்டு வெற்றி பெற்ற ‘உதிரிபூக்கள்’, ‘என் ராசாவின் மனசிலே’, ‘சேது’ மாதிரி இளையராஜா முழு படத்தையும் பார்த்து விட்டு இசையமைத்து கொடுத்திருக்கிறார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;