கோர்ட்டுக்கு போகும் சரிதா!

கோர்ட்டுக்கு போகும் சரிதா!

செய்திகள் 26-Oct-2013 6:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கே.பாலச்சந்தர் இயக்கிய, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற பல தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தவர் சரிதா. இவருக்கும் பிரபலமான மலையாள நடிகரான முகேஷ் என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு, 1988-ல் இருவரும் திருமணம் புரிந்துகொண்டனர். இவர்களுக்கு ஷ்ரவன், தேஜஸ் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முகேஷ் - சரிதா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மூத்த மகன் ஷ்ரவன் துபாயில் மருத்துவம் படித்து வருவதால் நடிகை சரிதா இப்போது அவருடன் துபாயில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் முகேஷ், பிரபல மோஹினி ஆட்ட நடன கலைஞரான மேதில் தேவிகா எனபவரை சமீபத்தில் திருமணம் புரிந்துகொண்டுள்ளார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை சரிதா, மீடியாவுக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில், ‘‘நானும் எனது கணவர் முகேஷும் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. இப்படியிருக்க, எனது கணவர் முகேஷ், சமீபத்தில் மேதில் தேவிகா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து நான் ரொம்பவும் அதிர்ச்சி அடைந்தேன்! சட்டப்படி விவாகரத்து பெறாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது ஹிந்து மத திருமண சட்டத்தின் படி குற்றமாகும். நான் இந்தியாவில் இல்லாத நேரம் பார்த்து அவர் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். இதை நான் சட்டரீதியாக சந்திக்க இருக்கிறேன்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலசந்தர் நலம்பெற வாழ்த்திய கமல் - வீடியோ


;