கௌதம் மேனனுக்கு கை கொடுத்த அஜித்!

கௌதம் மேனனுக்கு கை கொடுத்த அஜித்!

செய்திகள் 26-Oct-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படத்தில் இருந்து சூர்யா சமீபத்தில் விலகிக் கொண்டார் அல்லவா? அதனை தொடர்ந்து கௌதம் மேனன் யாருடன் கூட்டணி வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற கேள்விதான் சமீபத்தில் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் ஆக இருந்து வந்தது. இப்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது! அடுத்து கௌதம் மேனன் இயக்கவிருக்கும் படத்தில் ‘தல’ அஜித் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.

இந்தப் படத்தை அஜித் நடித்து ரிலீசாகவிருக்கும், ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னத்தின் ‘ஸ்ரீசத்ய சாய் மூவீஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார், இசை அமைப்பாளர் யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. தற்போது அஜித் நடித்து வரும் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம். ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தயாரிப்பில் இறங்கிய ஏ.எம்.ரத்னம், குறுகிய காலத்தில் அஜித் நடித்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர் ஆகிய அதிர்ஷ்டசாலிதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;