ஜெயா டிவியில் கமல்ஹாசன்!

ஜெயா டிவியில் கமல்ஹாசன்!

செய்திகள் 26-Oct-2013 11:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற தீபாவளியையொட்டி அஜித்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘அழகுராஜா’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகிய மூன்று படங்களே திரைக்கு வரவிருக்கிறது. மற்ற நடிகர்களின் ரசிகர்களை பொறுத்த வரையில் இந்த தீபாவளி கொஞ்சம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், ஒரு சில நடிகர்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக கண்டு மகிழும் வாய்ப்பு காத்திருக்கிறது! அந்த வரிசையில் தீபாவளியன்று விஜய் டிவியில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ‘விஸ்வரூபம்’ படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதே தினம், ஜெயா டிவியில் கமல்ஹாசன் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஒளிபரப்பாக இருக்கிறது. கமல் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நாளை நடைபெறவிருக்கிறது. சன் டிவி, கலைஞர் டிவி, புதிய தலைமுறை டிவி போன்ற பல முன்னணி சேனல்களும் சினிமா சம்பந்தமான் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் - மேக்கிங் வீடியோ


;