விஷ் யூ ஹேப்பி பர்த்டே அசின்!

விஷ் யூ ஹேப்பி பர்த்டே அசின்!

செய்திகள் 26-Oct-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜீவா இயக்கிய, ‘பெப்சி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அசின், அந்தப் படத்தை தொடர்ந்து, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சிவகாசி, ‘கஜினி’, ‘வரலாறு’, ‘காவலன்’ என குறிப்பிடத்தக்க பல படங்களில் நடித்து, குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டவர்! இவர் நடித்த படங்களில் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் கதாநாயகன் ‘ஜெயம்’ ரவியால் ‘மலபார்’ என்று அழைக்கப்படும் சுட்டித்தனமான பாத்திரமும், ‘கஜினி’ படத்தில் வரும் கல்பனா என்ற வெகுளி பெண்ணின் பாத்திரமும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. தமிழ் படங்களை தொடர்ந்து பாலிவுட்டிற்குச் சென்ற அசினால் அங்கு எதிர்பார்த்த மாதிரி பிரகாசிக்க முடியவில்லை. இருந்தாலும் இன்னமும் நம்பிக்கையோடு தனது முயற்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் அசினுக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு ’டாப் 10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. விஷ் யூ ஹேப்பி பர்த்டே அசின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;