பிரபல பின்னணிப் பாடகர் மன்னாடே காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் மன்னாடே காலமானார்!

செய்திகள் 25-Oct-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகர் மன்னாடே. இந்திய சினிமாவில் 1940-ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்று விளங்கிய இவர், ஹிந்தியின் பிரபல பின்னணிப் பாடகர்களான கிஷோர் குமார், முகமது ரஃபி, முகேஷ் ஆகியோருக்கு இணையாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர். மெல்லிசைப் பாடல்களை பாடுவதில் வல்லவர் இவர். மலையாளத்தில் 1965-ல் வெளியாகி சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற புகழ்பெற்ற படமான ‘செம்மீன்’ படத்தில் இடம் பெறும், ‘மானச மைனே வரூ…’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியது இவர் தான்.

ஹிந்தி மொழி தவிர குஜராத்தி, கன்னடம், மராத்தி, அசாமி, மலையாளம் என பல மொழிகளில் நிறைய பாடல்களை பாடியிருக்கும் மன்னாடே கொல்க்கத்தாவில் பிறந்தவர் என்றாலும், ஒவ்வொரு மொழியிலும் அட்சர சுத்தியோடு பாடும் திறமை கொண்டவர்! சமீபகாலமாக நோய்வாய் பெற்று சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பெங்களூரில் காலமானார். அவர் இந்த உலகை விட்டுப் பிரந்தாலும் அவரது குரல் இந்த உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;