எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகாபலி!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகாபலி!

செய்திகள் 24-Oct-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆன படம் ‘நான் ஈ’. வசூலில் சாதனை படைத்த இந்தப் படத்தை இயக்கிய ராஜமௌலி தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘பாஹுபாலி’ என்றும் தமிழில் ‘மகாபலி’ என்றும் பெயர் வைத்துள்ளார். சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் தெலுங்கின் ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ ஒன்றை, நேற்று கதாநாயகன் பிரபாஸின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ளனர். பிரம்மாண்ட அரங்கங்கள், கிராஃபிக்ஸ், அதிரடி சண்டை காட்சிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரகாஷ் எடிட்டிங் செய்யும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளை ஹாலிவுட் கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.

தெலுங்கின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசை அமைக்க, கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். மிகவும் ரகசியமான முறையில் இதன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த பிரம்மாண்ட படமான ‘மஹதீரா’ மற்றும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட ‘நான் ஈ’ படங்களை தொடர்ந்து ‘ராஜமௌலி’ இயக்கி வரும் இந்த பிரம்மாண்ட படைப்பின் மீது இப்போதே எக்கச்சக்க எதிர்பார்ப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;