டப்பிங்கில் மாலினி!

டப்பிங்கில் மாலினி!

செய்திகள் 24-Oct-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் க்ரிஷ் சத்தார், நித்தியா மேனன் நடித்திருக்கும் படம் ‘மாலினி 22 பாளையம் கோட்டை’. படப்பிடிப்பு முடிவடைந்த இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் இன்று சென்னையிலுள்ள RMP ஸ்டுடியோவில் துவங்கியது. அரவிந்த் சங்கர் இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோவை அடுத்த மாதம் வெளியிட இருக்கின்றனர். மலையாளத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், ரீமா கல்லிங்கல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘22 ஃபீமெயில் கோட்டயம்’ படம் தான் தமிழில் ‘மாலினி 22 பாளையம் கோட்டை’யாக ரீ-மேக் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருஷ்யம் தெலுங்கு டிரைலர்


;