ஆர்யன் ராஜேஷுடன் இரண்டு கதாநாயகிகள்!

ஆர்யன் ராஜேஷுடன் இரண்டு கதாநாயகிகள்!

செய்திகள் 24-Oct-2013 1:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எ பூமிஜா சினிமா’ என்ற பட நிறுவனம் சார்பாக டி.ரமேஷ் பாபு, டி.பிரவீணா தயாரிக்கும் படம் ‘தோடா அட்றா சக்க’ இந்தப் படத்தில் ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக மோனிகா சிங், இஷாசாப்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கும் ஸ்ரீகரபாபு படம் பற்றி கூறும்போது,

“காதல், காமெடி, சஸ்பென்ஸ் நிறைந்த படம் இது. ஊட்டியில் நாடக கம்பெனி நடத்துபவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். அங்கே இருப்பவர்கள் டாட்டா, பிரலா மற்றும் ராயல் மூவரும். இவர்களுக்கு திடீரென்று ஒரு கோடி ரூபாய் பணம் கிடைக்கிறது. அவர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா? என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறோம். இந்தப் படம் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ற படமாக இருக்கும்’’ என்கிறார். இந்தப் படத்திற்கு வாசு வசனம் எழுதியிருக்க, ஜான் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விந்தை - டீசர்


;