நடிப்பதற்காக 8 மொழிகளை கற்ற டாக்டர்!

நடிப்பதற்காக 8 மொழிகளை கற்ற டாக்டர்!

செய்திகள் 24-Oct-2013 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கில் 40 படங்களுக்கும் மேல் நடித்துள்ள டாக்டர் பரத் ரெட்டி தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிரகாஷ்ராஜுடன் ‘பயணம்’ மற்றும் ‘மல்லுக்கட்டு’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ரகளபுரம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தற்போது, ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கி வரும், ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

”நான் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும், என்பதற்காக எட்டு மொழிகளை கற்றிருக்கிறேன். அத்துடன் கிக் பாக்சிங், சண்டை பயிற்சி போன்றவைகளையும் கற்றுகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் பரத் ரெட்டி! இவர், அப்பலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;